Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வெளிய வரல ….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு …. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி ….!!!

கூலி தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள கீழ்மனம்பேடு கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்  தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவி முருகலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மது போதையில் வீட்டிற்கு வந்த அவர் தன் மனைவியை தகாத வார்த்தையால் திட்டி, அவரை அடித்துள்ளார். இதன் பிறகு தன்னுடைய அறைக்கு தூங்கச் சென்றார்.

ஆனால் வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி உள்ளே சென்று பார்த்தபோது சசிகுமார் அறையில் இருந்த மின் விசிறியில்  சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி வெள்ளவேடு போலீசில் புகார் அளித்தார் . இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |