Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷுடன் ரொமான்டிக் புகைப்படம்…. மனைவி வெளியிட்டுள்ள மாஸ் பதிவு…. குவியும் லைக்ஸ்…!!!

முன்னணி நடிகர் தனுஷை கட்டி அணைத்தபடி அவரது மனைவி வெளியிட்டுள்ள ரொமான்டிக் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஹாலிவுட் படத்திற்காக தனுஷ் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தனது குடும்பத்துடன் கர்ணன் திரைப்படத்தை பார்த்துள்ளார். தனுஷின் மனைவியும், நடிகர் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா கர்ணன் படத்திற்கு அளிக்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கணவர் தனுஷை கட்டியணைத்தபடி ஒரு புகைப்படத்தை எடுத்து அதனுடன் கர்ணன் படத்தின் பாடல் வரிகளான ‘கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/CNls1inDxlW/?igshid=nzzayd3ho6m9

Categories

Tech |