மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செருதூர் மீனவர்கள் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த நான்கு மீனவர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். இவர்கள் வேதாரணியத்தில் கிழக்குப் பகுதியில் சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்களது வலையில் இரும்பு போன்ற ஒரு பெரிய பொருள் சிக்கியிருக்கிறது. இதனை அவர்கள் எடுத்துக் கொண்டு கரைக்கு வந்துள்ளனர்.
பின்னர் இது குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோர காவல் படையினர் அந்தப் பொருளை ஆய்வு செய்துள்ளனர். அதன்பின் இது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் இதுகுறித்து அவர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இதுகுறித்து குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ராக்கெட் லாஞ்சர் வெடிக்கச் செய்வது என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த ராக்கெட் லாஞ்சரை கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்று மணலில் குழி தோண்டி அதனுள் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். இது வெடிக்கும் போது அதிக சத்தத்துடன் 10 அடி உயரத்திற்கு மணல் பறந்துள்ளது. இந்த சம்பவத்தில் கடலோர காவல்படை காவல் துறையினரும் உடன் இருந்துள்ளனர்.