வேற்றுகிரகத்தின் அமைப்பு போல் இருக்கும் எட்னா எரிமலையில் ஆய்விற்காக ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இத்தாலியின் தெற்கு பகுதியில் இருக்கும் சிசிலி தீவில் அமைந்துள்ள எட்னா எரிமலையானது, செவ்வாய் மற்றும் சந்திர கிரகத்தின் அமைப்பு போல இருக்கிறது. அங்கு கருமையான மாசுகளுக்கு இடையே தரிசு நிலங்களில் ரோபோக்கள் சுற்றி வருகின்றன. ஆனால், அந்த புகைப்படம் வேற்றுகிரகத்தில் ரோபோக்கள் சுற்றி திரிவது போல் தெரிகிறது.
அதாவது, ஜெர்மன் நாட்டின் விண்வெளி நிறுவனமானது, செவ்வாய் மற்றும் சந்திரன் போன்ற கிரகங்களில் வருங்காலத்தில் பயணங்கள் மேற்கொள்ளும் போது விண்வெளி வீரர்கள் சந்திக்கும் சூழ்நிலையை ஆய்வு செய்வதற்காக இந்த ரோபோக்களை எரிமலையில் சுற்றித்திரிய விட்டிருக்கிறது.