பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சி ராபர்ட் மாஸ்டரை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படத்தை ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து I love my daughter என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்பமானது தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வீட்டை விட்டு வெளியேறியதும் சொந்த மகளை சென்று பார்க்கவில்லையா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram