மணப்பெண்ணுக்காக வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகை கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் தரணிபாலன்-சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு சந்தோஷ், சவுமியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சவுமியாவுக்கும் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் நேற்று காலை சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்காக தரணிபாலன் அப்பகுதியில் உள்ளவர்களையும் உறவினர்களையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு நேற்று அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது.
அந்த நகை மணப்பெண் சவுமியாவுக்கு சீர் வரிசையாக கொடுக்கக்வேண்டிய நகையாகும். இதனையடுத்து தரணிபாலன் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.