Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகை மற்றும் பணம் கொள்ளை….. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஆவார். இவருக்கு கனகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். தற்போது கணேசன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார்.

இவர் வீட்டில் தனியாக இருந்த கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் கணேசனை கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் வைத்திருந்த 4¼ லட்சம் ரூபாய் பணம், 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து கணேசன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |