Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்றிருந்த பெண்ணுக்கு… காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் சிக்கியவர்கள் கைது..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ராம்நகர் 6-வது வீதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவரது மனைவி கண்மணி கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமராவதிபுதூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் கண்மணி மாலை 3.30 மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த மூன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், 30 பவுன் நகைகள், ரூ. 6 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது சம்பந்தமாக சிவகங்கை தாலுகா கீழக்கண்டனிகளத்தூர் அழகர்சாமி ( 33 ), திருப்பாச்சேத்தி ஆவரங்காடு விஜயன் ( 39 ) ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், 25 பவுன் நகைகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |