திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டியில் மூதாட்டியிடம் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொ.கீரனூரில் செல்லம்மாள் ( 75 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் 30 வயது வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அப்பகுதிக்கு வந்துள்ளார். அதன்பின்னர் செல்லமாளை மிரட்டி அந்த வாலிபர் அவர் காதில் இருந்த அரைப்பவுண் கம்மலை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.