Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண் போலீசிடம் வழிப்பறி முயற்சி…. போலீசார் தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெண் போலீசாரிடம் நகை பறிக்க முயற்சி மேற்கண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளச்சல் அருகில் பாலப்பள்ளம் ஆவாரவிளையை சேர்ந்தவர் மெபின் சிமிளா. குளச்சல் காவல் நிலையத்தில் சிசிடிஎன்எஸ் என்ற பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்றைய முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்ற மெபின் சிமிளாவிடம்  கடம்பரவிளை குருசடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சிமிளாவின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனை அறிந்து  சுதாகரித்துக் கொண்ட மெபின் சிமிளா, சரிந்து கொள்ளவே மர்ம நபர்களின் கையில் பெண் போலீசாரின் சங்கிலி கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி தப்பியது.

சரிந்து தப்பித்த பெண் போலீசார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதே போன்று கூட்டுமங்கலத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சரண்யா லட்சுமிபுரம் அருகே வருகையில் சரண்யாவிடம் மர்ம நபர்கள் வழிப்பறி செயலில் ஈடுபட்டுள்ளனர் அதில் தனது 61/2 பவுன் சங்கிலியை பறிகொடுத்த சரண்யா குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த்  வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றார். தொடர்ந்து  நடந்த இச்சம்பவம் குளச்சல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |