Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னது புது திட்டமா…? உச்சகட்ட மகிழ்ச்சியில் பொதுமக்கள்… நடைபெறும் தீவிர பணி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.எல்.ஏ செந்தில்குமார் அவர்கள் பொதுமக்களின் வசதிக்காக இரண்டு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கியமான பகுதிகள் கொடைக்கானலும், பழனி மலையும் விளங்குகிறது. இந்நிலையில் குடமுழுக்கு பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விசாகன், எம்.எல்.ஏ செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. செந்தில்குமார் அவர்கள் கூறும்போது பழனி மலை, கொடைக்கானல் பொருத்தவரை பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் காணப்படுவார்கள்.
இதனால் பொதுமக்களுக்கு வசதி செய்து தரும் வகையில் 2 சிறப்பான திட்டங்களை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். அந்தத் திட்டத்தில் பொதுமக்களுக்காக பழனியில் இருந்து கொடைக்கானல் வரை பயணம் செய்வதற்காக ஹெலிபேட் மற்றும் ரோப்கார் வசதியை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |