Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கு… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… நீர் தேங்கிய நிலையில் காணப்படும் சாலைகள்…!!

பலத்த மழை காரணத்தால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணமுடிகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது வெயிலானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியதில் சில மணி நேரத்தில் அப்பகுதியில் பலத்த மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் அமைந்திருக்கும் குளங்களில் தேங்கி நின்றபதை காணமுடிகிறது.

அதன் பின் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பூமி வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை போல் சங்கராபுரத்தில் மாலை நேர அளவில் மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மழையானது அடுத்த சில நிமிடங்களிலேயே இடி மின்னலுடன் இடைவிடாமல் அதிக நேரம் பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீரானது வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Categories

Tech |