ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சாலை பாதுகாப்பு கிரிக்கெட் உலக தொடர் 2020ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் களமிறங்கவுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த தொடரின் முதல் சீசன் 2020, 2021 என இரண்டு பகுதிகளாக நடந்தது.
முதல் சீசன்:
முதல் சீசனில் இந்தியன் லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், இங்கிலாந்து லெஜண்ட்ஸ் , பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் அணிகள் என 7 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்தியா – இலங்கை இறுதி போட்டி சென்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2ஆவது சீசன்:
செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கிய 2ஆவது சீசனில் புதிதாக நியூஸிலாந்து லெஜண்ட்ஸ் அணி பங்கேற்று 8 அணிகளாக களமிறங்கின. தற்போது வரை 20 போட்டிகள் நடந்து லீக் ஆட்டங்கள் முழுவதும் முடிந்துள்ளது. இந்நிலையில் அரையிறுதி போட்டியாக நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் VS ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தியா லெஜண்ட்ஸ்:
சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), எஸ் பத்ரிநாத், ஸ்டூவர்ட் பின்னி, மன்பிரீத் கோனி, ஹர்பஜன் சிங், அபிமன்யு மிதுன், நமன் ஓஜா, பிரக்யான் ஓஜா, முனாஃப் படேல், யூசுப் பதான், இர்பான் பதான், ராஜேஷ் பவார், சுரேஷ் ரெய்னா, ராகுல் சர்மா, வினய் குமார், யுவராஜ் சிங்
ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ்:
ஷேன் வாட்சன் (கேப்டன்), டிர்க் நன்ஸ், பிரைஸ் மெக்கெய்ன், பிராட் ஹாடின், பென் டங்க், அலெக்ஸ் டூலன், ஜேசன் கிரெஜா, ஸ்டூவர்ட் கிளார்க், ஜான் ஹேஸ்டிங்ஸ், கால்ம் பெர்குசன், பிராட் ஹாட்ஜ், கேமரூன் ஒயிட், சாட் சேயர்ஸ், பிரட் லீ, நாதன் ரியர்டன்