Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்ணி இல்லாமல் தவிக்கிறோம்… காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்… நாகப்பட்டினத்தில் பரபரப்பு..!!

நாகப்பட்டினத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்காடு பகுதியில் 200-ற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் குடிநீர் வினியோகம் செய்ய கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு அப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி என்பவர் தலைமை தாங்கியுள்ளார்.

இந்த சாலை மறியலில் பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலையில் அமர்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, கிராம நிர்வாக அலுவலர்கள், இன்ஸ்பெக்டர் மலர்கொடி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் அப்பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றறுள்ளனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |