Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாசமா கஷ்டப்படுகிறோம்…. கொட்டும் மழையில் சாலை மறியல்…. கோயம்புத்தூர் அருகே பரபரப்பு….!!

கொட்டும் மழையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களால் அன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதி அருகே உள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாதங்களாக இந்த பகுதியில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. மேலும் குடிநீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் கோபமடைந்த பொதுமக்கள் குன்னத்தூர் அருகே உள்ள அன்னூர்- சத்தி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னூர் காவல்துறையினர் மற்றும் குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கொட்டும் மழையிலும் குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதன் பின் ஊராட்சி மன்ற தலைவர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |