இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செவிலியர் காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்.புதுப்பட்டி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவல்துறையினராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் இரு சக்கர வாகனத்தில் திருத்தங்கல் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ராஜேந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் ராஜேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.