ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் தங்களின் கிராமத்தின் அருகில் இருக்கும் மணிமுத்தாறு அணை கட்டி கீழ்ப்புறத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலர் டிராக்டர் மூலம் மணல் கடத்தி சென்று விற்பனை செய்வதாக கூறியுள்ளனர்.
இன்னிலையில் ஆற்றிலிருந்து மணல் எடுத்து அதே பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவில் துளசி அம்மன் கோவில் மற்றும் பிள்ளையார் கோவில் களில் அதிக அளவில் கொட்டி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இதுபற்றி பல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உங்களிடம் மனு கொடுத்துள்ளோம் கிராம மக்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆற்று பகுதியில் திருட்டுத்தனமாக கடத்தப்படும் மணல் கொள்ளைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.