‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரீது வர்மா காதலித்து திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரீது வர்மா.. குறிப்பாக தமிழில் கடைசியாக இவர் நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் செம ஹிட் ஆனது.. இவருக்கென்று தமிழ் ரசிகர்கள் உருவானார்கள்..
தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் ரீது வர்மா சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சமூகவலைதளம் வாயிலாக பேட்டியளித்தார்.. அப்போது நீங்கள் திருமணம் எப்போது செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், நான் எப்போது கல்யாணம் செய்யப் போகிறேன் என்று என்னுடைய பெற்றோர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.. ஆனால் நான் இப்போதைக்கு கல்யாணம் செய்யப் போவதில்லை என்று அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டேன்.. எனக்கு ஏற்றவரை நான் எப்போது பார்க்கிறேனோ அப்போது தான் கல்யாணம் பண்ணுவேன்.. அது கண்டிப்பாக காதல் கல்யாணமாகத் தான் இருக்கும், என்று கூறியுள்ளார்..