இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான யுவராஜ் சிங் தனது ஓய்வுக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்
யுவராஜ் சிங் சென்ற வருடம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தான் எதற்காக ஓய்வை அறிவித்தார் என்பதையும், அப்போது தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதையும் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “வாழ்க்கை மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருந்த சமயம் பல விஷயங்களை நான் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. திடீரென என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தோன்றும். பல காரணங்களுக்காக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வீட்டிலையே அடைபட்டு இருந்தேன்.
மனதளவில் கிரிக்கெட் எனக்கு உதவியாக இருக்காது என்பதை தெளிவாக உணர்ந்தேன். எப்போதும் எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் ஆனால் அது எனக்கு மனதளவில் உதவி புரியவில்லை. இதனால் எனது ஓய்வு பெறும் நிலைக்கு வந்தேன். அப்போது அடுத்த சீசனில் விளையாடலாமா? ஓய்வு பெறலாமா? அல்லது வேண்டாமா? அதிக அளவு யோசித்தேன். எப்போதாவது கிரிக்கெட் விளையாட்டை மிஸ் செய்வேன். நான் அதிகமாக கிரிக்கெட் விளையாடியதால் அடிக்கடி மிஸ் செய்யவில்லை.
ரசிகர்களின் அன்பு நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர வைக்கின்றது. எனக்கு மதிப்பை கொடுத்துள்ளது. அதே நிலையில் நான் ஓய்வு பெறுவதற்கு விரும்பினேன். ஓய்வு பெற்ற நாள் நான் சுதந்திரமாக உணர்ந்தேன். அதை என்னால் வெறும் வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. ஓய்வு அறிவித்த பின்னர் மனதளவில் மகிழ்ச்சியை உணர்ந்தேன் அதிக ஆண்டுகள் சரியாக உறங்காமல் இருந்த நான் அதன் பிறகு நிம்மதியாக உறங்குவதற்கு முயற்சி செய்தேன்” என தெரிவித்துள்ளார்