திரைப்பட நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
ராமநாதபுரம் மாவட்டத்தின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும்,பிரபல நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில மாதங்களாக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்
தேனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வந்த பிரிட்டிஷ் நேற்றைய தினம் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட உள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு திரட்டினார்.இந்நிலையில் மதிய உணவுக்கு பிறகு வீட்டில் இருந்த ரித்தீசுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மயங்கி விழுந்த ரித்திஷை , உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ரித்தீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட உடன் ரித்தீஷின் உறவினர்களும் அதிமுகவினரும் அதிர்ச்சியடைந்து துயரத்தில் ஆழ்ந்தனர் இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்த உறவினர்கள் அவருக்கு இதயத்துடிப்பு இருப்பதாக கூறி மற்றொரு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர் அந்த மருத்துவமனையிலும் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டனர் பிரிட்டிஷ் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக சொந்த ஊருக்கு வந்த பிரிட்டிஷ் இழந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது இந்நிலையில் அவரது குடும்பம் சென்னையில் இருந்து தற்பொழுது ராமநாதபுரத்திற்கு வந்துள்ளது மேலும் ரித்தீஷின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டதை அடுத்து அதிமுக தொண்டர்களும் பொது மக்களும் அவரை காண திரளாக வந்தனர் இதனை அடுத்து மாலை 5 மணி அளவில் அவரது உடல் அவரது சொந்த மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து உள்ளது.