விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்ஆண்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், இவர் தற்போது பாலாஜி குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ”கொலை” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக சிவலிங்கா, ஓ மை கடவுளே, ஆகிய படங்களில் நடித்த ரித்திகா சிங் நடிக்கிறார். இன்பினிட்டி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.