Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் எரிபொருள் விலை கடும் உயர்வு…. 4000 பெட்ரோல் நிலையங்கள் அடைக்கப்படும் அபாயம்…!!!

ஸ்பெயின் அரசாங்கம், எரிபொருள் விலையேற்றம் காரணமாக 4000 பெட்ரோல் நிலையங்களை அடைக்க கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது மற்றும் கொரோனா வைரஸ் போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, ஸ்பெயின் அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பை சரி செய்ய பல கொள்கைகளை வகுத்தது. எனினும் அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது.

ஸ்பெயின் அதிபரான பெட்ரோ சான்செஸ், கடந்த மார்ச் மாதத்தின் கடைசியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் எரிபொருள் லிட்டருக்கு 20 சென்ட் தள்ளுபடி அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மானியத்திற்கு, அரசாங்கம் 15 சென்ட் வழங்கும் எனவும் பெட்ரோல் நிலையங்கள் 5 சென்ட் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. எனினும், சிறு மற்றும் நடுத்தர பெட்ரோல் நிலையங்கள் அதிக இழப்பை சந்திக்கும் என்று எதிர்ப்புகளும் கிளம்பியது. எனவே 350க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதே நிலை தொடரும் பட்சத்தில் நாடு முழுக்க சுமார் 3000-த்திலிருந்து 4000 பெட்ரோல் நிலையங்கள் அடைக்கப்பட வேண்டிய நிலை உண்டாகும் என்று அந்நாட்டின் எரிபொருள் விநியோகஸ்தர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

Categories

Tech |