Categories
உலக செய்திகள்

மாமனாரை நினைத்து பெருமைப்படுகிறேன்… மனம் திறந்த ரிஷி சுனக்…!!!

பிரிட்டனில் பிரதமர் பதவிக்குரிய போட்டியில் முன்னிலையில் இருக்கும் ரிஷி சுனக் தன் மாமனார் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பிரிட்டனில் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணி நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் தன் மாமனார் நாராயண மூர்த்தி பற்றி கூறியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, என் மாமனார் ஆரம்ப காலகட்டத்தில் எதுவும் இல்லாமல் வாழ்க்கையை தொடங்கியவர். சேமித்து வைத்திருந்த 100 பவுண்டுகள் தான் அவருக்கு தொடக்கத்தில் உதவி இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் உலகிலேயே மிகப்பெரிய நிறுவனங்களை தொடங்கினார். பிரிட்டனில் உள்ள மக்கள் ஆயிரக்கணக்கில் அங்கு பணிபுரிகிறார்கள். அவரது வாழ்க்கை பயணம் என்னை பெருமையடைய செய்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |