Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…பாராட்டும் புகழும் கூடும்… விஐபிக்களின் சந்திப்பு உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே,  இன்று பாராட்டும் புகழும் கூடும் நாளாகவே இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விஐபிக்களின் சந்திப்பு உண்டாகும். இன்று திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாகவே முடியும்.

குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றம் அடைய உதவும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று ஆதாயம் கிடைக்கும். மனமும் மகிழ்ச்சியாகவே இருக்கும். இன்று மாணவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவியும் நாளாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்காரத்தை வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை எதிர்கொள்ளுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |