ரிஷப ராசி அன்பர்களே..!!!! சிலரது பேச்சு மனதை பாதிக்கலாம். முன் யோசனையுடன் நடந்து கொள்வதால் தேவையற்ற சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவது நல்லது. அன்றாட செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படும். இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் மனசுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும்.
உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தனமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும், பயணங்களால் அலைச்சல் இருக்கும். மனதில் ஒருவித கவலை வந்து செல்லும், எதை பற்றியும் குழம்பி கொள்ளாமல் காரியத்தை மட்டும் தெளிவாகச் செய்யுங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம்சிவப்பு