Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…அலைச்சல் அதிகரிக்கும்…புகழ் உண்டாகும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!      இன்று உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பணம் நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். மற்றவர்களை எந்த விதத்திலும் குறை சொல்லாமல் இருப்பது நல்லது. தந்தையுடன் சிறிய மனஸ்தாபங்கள் வந்து செல்லும். எதிர்பாராத காரியம் நிறைவேறும். வாகனத்தில் செல்லும்போதும் விலை உயர்ந்தப் பொருட்களின் மீது கவனமாக இருங்கள். பிரச்சினைகள் சுமுகமாக இருக்கும்.

தேவையில்லாத விஷயத்திற்கு எப்பொழுதும் மன குழப்பம் அடைய வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மேலும் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |