ரிஷப ராசி அன்பர்களே…!!!! இன்று உங்களுக்கு தொடர்பு இல்லாத பணி கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும். செயல்களில் முன் யோசனை அவசியம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பர்கள் உதவிகளை செய்வார்கள். கூடுதல் செலவுகள் கொஞ்சம் ஏற்படலாம். பெண்கள் நகையை இரவில் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம்.
இன்று ஏகப்பட்ட போட்டிகள் உங்களுக்கு இருக்கும் போட்டிகளை சமாளிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அவசரப்படாமல் நிதானமாக காரியங்களை மட்டும் செய்யுங்கள், அது போதும். மனதில் அமைதி இருக்கும் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் கௌரவம் கூடும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போது மட்டும் கவனமாக இருங்கள்.
கணவன் மனைவிக்கு இடையே மன வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி உங்களுடைய காரியங்களை அப்படியே செய்யுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை மற்றும் இளமஞ்சள்