Categories
ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு “வருமானம் இருமடங்காகும்” விளையாட்டில் கவனம் தேவை ….!!

ரிஷபம் ராசி அன்பர்களே….!! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.  தக்க சமயத்தில் நண்பர்கள் உங்களுக்கு கை கொடுத்து , உதவிகளை செய்வார்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தீட்டிய திட்டம் அனைத்தும் நிறைவேறும். இன்று உங்களின் நட்பு வட்டம் விரிவடையும் நாளாக இருக்கும். இன்று உங்களின் வருமானம் இருமடங்காக இருக்கும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அயல்நாட்டிலிருந்து அலைபேசி மூலம் நல்ல தகவல் வரக்கூடும். இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் , அதன் மூலம் உங்களுக்கு நன்மையும் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும் . தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவு முன்னேற்றம் இருக்குங்க. விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருக்கும். அதே போல விளையாடும் போது கொஞ்சம் கவனமுடன் விளையாடுங்கள். சக மாணவருடன் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். இன்று நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்டமான  நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |