Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரிஷப் பண்ட்” இந்திய அணியின் சிறந்த இளம் கிரிகெட்டர்… சுரேஷ் ரெய்னா பெருமிதம்…!!

இந்திய அணியில் சிறந்த இளம் கிரிக்கெட் என்றால் அது ரிஷப் பண்ட் என சுரேஷ் ரெய்னா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ‘ரிஷப் பண்ட் இந்திய அணியில் சிறந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்’ ஆக உள்ளார் என பெருமிதம் கூறியுள்ளார். மேலும் “எத்தகைய சமரசமும் இல்லாமல் சாதாரணமாக ஆட்டத்தினை விளையாட வேண்டுமெனவும் அவ்வாறு செய்தால் நிறைய ரன்களை எடுக்க இயலும்” எனவும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். உத்திர பிரதேசத்தில் சென்ற ஒருவாரத்திற்கு மேலாக ரெய்னாவும், பண்டும் சேர்ந்து வலை பயிற்சியினை மேற்கொண்டுள்ளனர். கொரோனா பரவலில் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களின் பயிற்சி அனுபவங்களை இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவும், டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட் அவர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் தனது கருத்துக்களை கூறும் போது, ” 2011 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்றுத்தந்த சுரேஷ் ரெய்னாவுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொள்வது தனக்கு சிறந்த அனுபவமாக உள்ளது. அவருடன் சேர்ந்து பயிற்சி செய்யும்போது அதிக விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் கிரிக்கெட்டைப் பற்றி அவருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும்போது விளையாட்டை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. கொரோனா காரணமாக சில மாதங்களாகவே பயிற்சி மேற்கொள்ளாமல் வீட்டில் சோம்பேறித்தனமாக இருந்தேன். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளேன். இத்தகைய  பயிற்சியானது வரப்போகும் நாட்களில் நான் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவதற்கு உதவும் என நம்புகிறேன்” என்று தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |