ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் இயேசுவின் சிலையானது பிங்க் நிறத்தில் காணப்படுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை மாமோகிராம் என்ற சோதனை வாயிலாக அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அதிலும் அந்த சோதனையின் மூலம் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு இதுவரை பிரேசிலில் 95% பெண்கள் குணமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் 125 அடி உயரம் உடைய Rio’s Christ the Redeemer statue பிங்க் நிறத்தில் ஒளிரூட்டப்பட்டு ஜொலிக்கிறது. இதனை காண்பதற்காக மக்கள் கூட்டம் அங்கு அலை மோதுகிறது.