Categories
மாநில செய்திகள்

இப்போதைக்கு செமஸ்டர் தேர்வுகள் இல்லை… ரத்து செய்வது குறித்தும் முடிவெடுக்கவில்லை.. அமைச்சர் கே.பி.அன்பழகன்!!

செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்தோ, ரத்து செய்வது குறித்தோ எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள், கொரோனா சிறப்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. எனவே தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை. நிலைமை சீரடைந்த பிறகே, தேர்வுகள் நடத்துவது அல்லது ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.

மேலும், கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வுகள், பொதுத்தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில்,கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பழகன் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |