Categories
உலக செய்திகள்

இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே மீண்டும் பிரச்சனையா…? கால அவகாசம் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்…. சுமூக முடிவை எடுத்த இருநாடுகள்….!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் விளைவிக்கப்படும் பாஸ்மதி அரிசி குறித்த விவகாரத்தில், “பாஸ்மதி அரிசி” இருநாடுகளுக்கும் சொந்தம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதியான பஞ்சாப்பில் பாசுமதி அரிசி பயிரிடப்படுகிறது. இதனால் 2 நாடுகளுமே பாசுமதி அரிசியின் மீது சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கிடையே இந்தியா அரிசியை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 6.8 பில்லியன் டாலர்களை சம்பாதிக்கிறது.

மேலும் பாகிஸ்தான் சுமார் 2.2 பில்லியன் டாலர்களை அரிசி ஏற்றுமதி செய்வதன் மூலம் சம்பாதிக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பாசுமதி அரிசிக்கு புவிசார் போன்ற குறியீடு வழங்கக்கோரி இந்தியா விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் பாசுமதி அரிசி குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருநாடுகளுக்கும் கால அவகாசம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தவும் பரிந்துரை செய்தது. அதன்படி தற்போது இரு நாடுகளுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தையில் பாஸ்மதி அரிசி இருநாடுகளுக்கும் சொந்தமென்று சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |