Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

* லேசான அறிகுறிகளுடன் வந்தவர்களை, சிகிச்சை முடிந்து 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம்.

* டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

* அதேபோல அறிகுறி மற்றும் 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யலாம்.

* டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை 14வது நாளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பரிசோதிக்க வேண்டும்.

* மிதமான பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் தேவையில்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யலாம்.

* தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் டிஸ்சார்ஜ் செய்யலாம்.

* முதல்கட்ட சோதனையில் உறுதி ஆனவர்களுக்கு காய்ச்சல் குணமானால் மறு பரிசோதனை தேவை இல்லை.

* அறிகுறியற்றவர்களை வீட்டிற்கு அனுப்பும் முன் பிசிஆர் சோதனை தேவையில்லை.

* அறிகுறி இல்லை என்றால் மறு பரிசோதனை தேவை இல்லை, வீட்டிற்கு அனுப்பலாம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,662 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 17,847 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பாக சில திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |