Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

ரூ4,00,000 வருவாய்……. உடல் நலத்துடன் செல்வத்தையும் தரும் மரவள்ளி கிழங்கு….!!

ஈரோடு மாவட்டம் சத்திய மங்களம் பகுதி அருகே மரவள்ளி கிழங்கை பயிரிடும் விவசாயி ஒருவர் ஏக்கருக்கு ரூ1,00,000 லாபம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார்.

சத்தியமங்கலம் பகுதியை அடுத்த ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேஸ்வரி சுப்பிரமணியன் தம்பதியினர். சுப்பிரமணி பெரும்பாலும் வேலைக்காக வெளியூர் செல்பவர் என்பதால் அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில் மகேஸ்வரி தான் விவசாயம் செய்து வருகிறார். 4 ஏக்கரிலும் குச்சி கிழங்கு எனப்படும் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டுள்ளார் மகேஸ்வரி.

12 மாத கால பயிரான மரவள்ளி வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது என்பதோடு 15 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சும் மகேஸ்வரி அதன் காரணமாக கூடுதலாக தண்ணீர் மிஞ்சுவதாக கூறுகிறார். உரமிடும் பணிக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவிடுவதாகவும் 20 டன் வரை மகசூல் கிடைப்பதாகவும்  கூறுகிறார்.

ஒரு டன்க்கு 7000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை விலை போவதால் ஏக்கர் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக கூறும் இவர் நோய் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லாத பயிராக மரவள்ளிக்கிழங்கு இருப்பதாக கூறுகிறார். முள்ளுவாடி என்ற ரகத்தை பயிரிட்டுள்ள இவரது  விவசாய தோட்டத்தில் வந்து அறுவடை செய்த மரவள்ளி கிழங்குகளை லாரிகள் மூலம் வியாபாரிகள் ஏற்றி செல்கின்றனர்.

மரவள்ளியை பொருத்தவரை பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் உணவாக இருக்கிறது. அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக விளங்குகிறது மரவள்ளிக்கிழங்கு. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆகவே குறைந்த செலவில் விவசாயம் செய்து லாபம் ஈட்ட நினைக்கும் விவசாயிகள் இதனை தாராளமாக முயற்சிக்கலாம் என்கிறார்.

Categories

Tech |