தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு அரசியலில் ஈடுபட்ட ராமராஜன் பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகுகிறார். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு சாமானியன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சாமானியன் படத்தில் ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இதனையடுத்து சாமானியன் திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு இசைஞானி இளையராஜாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளனர். ராமராஜன் நடித்த பல திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த நிலையில் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராமராஜன் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணி வைப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இசை ஞானி இளையராஜாவை ராமராஜன் உட்பட பட குழுவினர் சந்தித்த புகைப்படம் தற்போது வைலைதளத்தில் வைரலாகி வருகிறது.