‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’, ‘நெற்றிக்கண்’ போன்ற படங்களில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில், வெளியான ‘டாக்டர்’ திரைப்படத்தில் இவர் நகைச்சுவை மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்நிலையில், இவர் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், நடிகர் வடிவேலு ரெடின் கிங்ஸ்லியை அழைத்து பாராட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.