Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்போதான் குறைஞ்சிருக்கு… சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் மட்டுமே நீலகிரிக்குள் நுழைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது 15-க்கும் கீழ் குறைந்து விட்டது. இந்நிலையில் கேரளாவில் வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் அந்த மாநில எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர்.

இது பற்றி நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர் என தெரிவித்துள்ளார். எனவே நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாக கேரளா சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட்டு, வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெற்ற பின்னரே நீலகிரிக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |