ஜெயலலிதா நினைவிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 27ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு கட்டப்பட்ட நினைவிடமானது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை சென்று பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே நினைவிடத்தை பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.