கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் பகுதிகளின் பட்டியலில் மீண்டும் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து உலக நாடுகளும் புதிதாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் இருக்கும் பகுதிகளின் பட்டியலை சுவிட்சர்லாந்து வெளியிட்டது. அதன்பின் அந்தப் பகுதியிலிருந்து வரும் நபர்கள் தனிமைப்படுத்திய பின்னரே வெளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பட்டியலில் மேலும் மூன்று பகுதிகள் இணைக்கப்பட்டு உள்ளது. அவைகள், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகும். இந்த பகுதிகளிலிருந்து வருபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்திய பின்னரே வெளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.