Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING : இன்று முதல் அக்டோபர் – 1 வரை தடை…… அதிரடி உத்தரவு……!!

இன்று முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கீழ்க்கண்ட விஷயங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தளர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் பல செயல்களுக்கு அரசு சார்பில் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. தளர்வுகளின் அடிப்படையில் மக்கள் சாதாரண இயல்பு வாழ்க்கைக்கு  திரும்ப தொடங்கிவிட்டனர்.

இது ஒருபுறமிருக்க நாடாளுமன்றத்தில் மத்திய  அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாவிற்கு  எதிராக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 27) நள்ளிரவு(12 AM) முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சென்னையில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |