தாய்லாந்தில் உணவு கழிவறையில் சென்ற ஊழியர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
நம்மூரில் சில கழிவறைகளில் கரப்பான்பூச்சி, பல்லி, சிறிய பூச்சிகள் எதையாவது பார்த்தால் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வருவோம். ஆனால் இந்த உணவகத்தின் கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று இருந்தது. கேட்கவே எப்படி இருக்கிறது? அப்படியான ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் ஃபிட்சன்டுக் என்ற பகுதியில் உணவகத்தில் பணியாற்றும் க்னுப் போவின் என்ற ஊழியர் கழிவறைக்கு சென்றபோது கழிவறையின் கூரை பகுதியை உடைத்துக்கொண்டு 8 அடி கொண்ட பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
இதைக்கண்ட க்னுப் போவின் அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது செல்போனில் அதை வீடியோவாக படம் பிடித்தார். சக ஊழியர்களை அங்கு அழைத்து காட்டியுள்ளார். அவர்கள் அதை பார்த்து மிகவும் பயந்தனர். பின்னர் மீட்புக் குழுவிற்கு தகவல் அனுப்பப்பட்டது. அதன்பேரில் மீட்புக்குழுவினர் வருவதற்குள் அந்த எட்டு அடி நீள பாம்பு மறைந்துவிட்டது. இந்த செய்தி சன் நிறுவனம் வெளியிட்டிருந்தது. கழிவறைக்குள் பாம்பு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.. இந்த பாம்பு இருந்த பகுதிக்கு சற்று தொலைவில் மீட்புக்குழுவினர் பிடித்தனர் அது ஒரு மலைப் பாம்பாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
Huge python smashes through a toilet ceiling at a restaurant pic.twitter.com/UGdC77vjwL
— The Sun (@TheSun) December 15, 2020