Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவில் பொறுப்பு…! உறுதிக்காட்டிய அன்பில் மகேஷ்… பின்வாங்கி ஒதுங்கிய உதயநிதி… வெளியான சுவாரசிய தகவல் …!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நிறைய பேருக்கு தெரியாது. இந்த இடத்தில் அந்த ஒரு உண்மையை சொல்ல வேண்டும், எனவே நான் சொல்லுறேன். தலைவர் அவர்கள் என்னை அழைத்து நம்முடைய துரைமுருகன் மாமா அவர்கள் பொதுச்செயலாளர் அவர்களை அழைத்து..

இளைஞரணி செயலாளராக பொறுப்பை நீ ஏற்க வேண்டும் என்று என்னிடத்திலே கூறினார்கள். நான் சொன்னேன்…  இல்லை, மிகப்பெரிய ஒரு பொறுப்பு அது.தலைவர் அவர்கள் இளைஞர் அணி ஆரம்பித்த காலத்தில் இருந்து அந்த பொறுப்பில் இருந்திருக்கிறார்கள்.. நான் வேண்டுமென்றால்  துணை செயலாளராக இருந்து கொள்கிறேன். யாராவது துணை செயலாளர், மாவட்ட அமைப்பாளரை நீங்கள் இளைஞரணி செயலாளராக ஆக்குங்கள் என்று சொன்னேன்.

நான் அவருக்கு கீழே கொஞ்ச நாள் பணியாற்றி விட்டு,  பிறகு என்னுடைய பணியை பார்த்து எனக்கு பொறுப்பு கொடுங்கள் என்றேன். அதற்க்கு முதன் முதலில் எதிர்த்தது திரு.எழிலரசன் அவர்களும், நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தான். இல்லை கண்டிப்பாக இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

நான் பயந்தன்,  மிகப்பெரிய பொறுப்பு, மிகப்பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கும் என்று சொன்னேன். அப்போது எழிலரசன் அவர்கள் தான் என்னிடம்  நான் பார்த்துக்கொள்கிறேன். நான் கற்றுத் தருகிறேன், என்னென்ன செய்ய வேண்டும் என்று..  மாணவர் அணியை நான் எப்படி வழி நடத்துகிறேனோ,  அதேபோல் இளைஞரணியை வழிநடத்துங்கள் என்று அந்த உத்வேகத்தையும்,  உற்சாகத்தையும் என்னுடன் இருந்து இத்தனை நாட்களாக செய்து வருகின்றார்.

Categories

Tech |