Categories
தேசிய செய்திகள்

“ராகுல் காந்திக்கு பதிலடி” விமர்சனத்தில் சிக்கிய பாஜக முதல்வர்….. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவில் 19 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். கடந்த 30-ஆம் தேதி குண்டலுபேட்டை வழியாக கர்நாடக மாநிலம் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தியுடன் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மேல் சபை எதிர்க்கட்சித் தலைவர் பி.கே ஹரிபிரசாத் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவக்குமார் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, இந்தியாவில் அதிக ஊழல் நிறைந்த மாநிலமாக கர்நாடகா இருக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 40 சதவீதம் கமிஷன் வாங்கி கொள்கிறார்கள். அந்த வகையில் 13,000 தனியார் பள்ளிகளிடம் 40% கமிஷன் வாங்கியுள்ளனர். இதை நான் மட்டும் கூறவில்லை. பாஜக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களே இது ஊழல் நிறைந்த அரசு என்றுதான் கூறுகிறார்கள். இந்த பேச்சு தற்போது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆளும் பாஜக கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர். இந்த பாதயாத்திரையானது ஜன்சங்கல்ப் என்ற பகுதியில் இருந்து தொடங்கப்பட்ட நிலையில், முதல்வர் பசுவராஜ் பொம்மை, மூத்த தலைவர் எடியூரப்பா உட்பட நிர்வாகிகள் கமலாபூர் கிராமத்திற்கு சென்றனர்.

அந்த கிராமத்தில் வசிக்கும் ஹிரலா கொல்லப்பா என்ற தலித் நபரின் வீட்டில் முதல்வர் உட்பட நிர்வாகிகள் அனைவரும் உணவு அருந்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியான நிலையில் தற்போது பாஜகவை நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். அதாவது தலித் நபரின் வீட்டில் சாப்பிடுவதாக கூறிவிட்டு ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி தட்டில் இலையை போட்டு சாப்பிட்டுள்ளனர். அதோட தண்ணீர் பாட்டில் மற்றும் காபி கப் போன்றவையும் ஹோட்டலில் இருந்து வாங்கப்பட்டதுதான் என்கிறார்கள். மேலும் தலித் நபரின் வீட்டில் சாப்பிடுவதாக நாடகமாடி வீட்டு ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி பாஜகவினர் சாப்பிட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் ‌

Categories

Tech |