மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி கடன் கொடுப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன.மேலும் பல்வேறு தொழில்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் பல்வேறு விமர்சனம் எழுந்தது. இதையடுத்து கடந்த 23_ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் , அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாட்டில் மட்டும் இந்த சிக்கல் இல்லை என்று தெரிவித்ததோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதில் ,வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசு சார்பில் இருந்து ரூ.70, 000 கோடி உடனடியாக ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் கடன் வட்டி குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான உயர்மட்டக்குழு_வின் ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை , உபரி இருப்புத் தொகையை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்ற பரிந்துரை படி மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு எடுத்துள்ளது.