Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புயலில் சிக்கியவர்களை மீட்டு தாருங்கள்….. மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை….. ராமநாதபுரத்தில் சோகம்…!!

ஓமன் நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்த மீனவரின் உடலை மீட்டு தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை இட்ட மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் ஓமன் நாட்டில் கடந்த ஓராண்டாக ஒப்பந்தம் அடிப்படையில் கூலித் தொழிலாளர்களாக மீன்பிடித்து வந்தனர். கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட புயலால் மீனவர்கள் மாயமாகினர். பிறகு வோமன் கடற்கரையில் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

Image result for மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

டிஎன்ஏ சோதனையில் இறந்தவர்கள் கந்தபாளையம் பகுதியை சேர்ந்த காசி மற்றும் கார்மேகம் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ பெண்கள் உயிரிழந்தவரின் உடல்களை மீட்டு தரும்படி கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர். மேலும் மீனவர்களின் குடும்பத்தாருக்கு ஏமன் நாட்டில் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தரும்படி ஆட்சியர் வீரராகவ் அவர்களிடம் வலியுறுத்தினர். 

Categories

Tech |