Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப பேர் வாறாங்க…. நடவடிக்கை எடுக்கனும்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

ரேஷன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகம் காணப்படுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றது. ஆனால் ஏராளமானோர் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி இன்றியும், முகக் கவசம் அணியாமலும் இருக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி இன்றி மக்கள் பொருட்களை வாங்கிச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனையில்  தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியபோது அரசு பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக கடை திறப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றது. ஆனாலும் பலர் கொரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவும் பல்வேறு மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மக்கள் முகக் கவசம் அணியாமல் கடைகளில் திரண்டு நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். எனவே அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு மளிகை, காய்கறி, ரேஷன் கடைகளில் கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |