இந்த மாதம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்களை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு வரும் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. இதனால் 1 நாளைக்கு 200 பேர் சமூக இடைவெளியுடன் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 996 ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். எனவே மாவட்டம் முழுவதிலும் 728 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டனர். இந்த பணி சில நாட்களில் முடிவு பெற்று பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.