Categories
உலக செய்திகள்

மீண்டும் இவர் தான் பிரதமராக வேண்டும்… இணையத்தில் கோரிக்கை மனு…!!!

பிரிட்டன் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சனை நியமிக்க வேண்டும் என்று இணையதளத்தில் ஒரு கோரிக்கை மனு உருவாக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அதில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டன் நாட்டின் அரசாங்கத்தில் தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய இணையதள பக்கத்தில் வரப்போகும் அடுத்த தேர்தலில் நடைபெற உள்ள மிகப்பெரிய குழப்பத்தை தீர்ப்பதற்கு போரிஸ் ஜான்சன் தான் சரியானவர் என்று தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டு ஒரு மனு உருவாக்கப்பட்டிருக்கிறது.

அந்த இணையதளத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களின் கருத்துக்களை குறிப்பிட்டு வருகிறார்கள். அவர் மீண்டும் பிரதமராக வந்தால் தான், நாட்டின் அரசியலில் ஏற்படும் குழப்பங்கள் சரியாகும் என்று கூறி வருகின்றனர்.

Categories

Tech |