பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு, அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தியதோடு, பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையையும் பல இடங்களில் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மதுரை பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், நிதியமைச்சர் பிடிஆர்ரை நேரடியாக சந்தித்து மன்னிப்பு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் பாஜகவில் தொடர போவதில்லை. பாஜகவில் இருக்கும் மத அரசியல் எனக்கு பிடிக்கவில்லை என கூறிய நிலையில் தற்போது அவரை பாஜவில் இருந்து நீக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் P.சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் P.சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
-மாநில தலைவர் @annamalai_k pic.twitter.com/AcY8Og9MHI
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 14, 2022