Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடிய யானைக்குட்டிகள்…. துரிதமாக செயல்பட்ட மருத்துவக்குழு…. வெளியான நெகிழ்ச்சி தகவல்….!!

தாய்லாந்தில் மத யானை குட்டிகள் 3 குண்டடி காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் உள்ள சோன்புரியில் 3 மத யானை குட்டிகள் எதிர்பாராதவிதமாக வேட்டைக்காரர்கள் வைத்த பொறியில் மாட்டிக்கொண்டது. மேலும் தோட்டாக்கள் யானையின் தோள்பட்டையில் பாய்ந்து எலும்பை துளைத்துள்ளது. இதனால் திசுக்கள் சேதமடைந்து அதிக அளவில் சீழ் வடிய ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் கால்நடை மருத்துவர்கள் தோட்டாவின் பெரும்பகுதியை அகற்றி எஞ்சியுள்ள தோட்டா துகள்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே மருத்துவ குழுவினர் அருகில் உள்ள பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் யானைகளிடம் கரக்கப்பட்ட பாலை கால் மற்றும் தோள்பட்டையில் கட்டு போடப்பட்டுள்ள யானை குட்டிக்கு கொடுத்து வருகின்றனர்.

Categories

Tech |